Tuesday, 23 April 2013

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்???!!!!

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்???!!!! என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி. ''பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது. எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Top-1 Engineering ஒரு காலத்தில் அரசு வேலை எப்படி இளைய தலைமுறைஇன் கனவாக இருந்ததோ... இப்போது அதே போல சொல்லப்போனால் அதை விட ஸ்திரமான ஒரு நிலைஇல் இருகின்றன பொறியியல் படிப்புகள் காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் 'கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்! பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள். காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் 'மோஸ்ட் வான்ட்டட்' ஆக உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம் Materials Science and Engineering பொறியியல் படை பிரிவுகளிலே இப்போது மிகவும் முக்கியமானது Materials Science and Engineering எல்லா பொருட்களின் மூலகூறுகளின் தன்மையை பற்றி படிப்பதே இதன் சிறப்பம்சம் இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள். Atomic Energy மும்பை பல்கலைகழகம் மற்றும் புவனேஸ்வரில் உள்ள NISER (National Institute of Science and Research) Bilology , Chemistry, Maths and Physics அடங்கிய ஐந்து வருடகளுக்கான இந்த Interagate M.Sc Course அளிக்கின்றன என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான 'நெஸ்ட்', 'ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்'-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் 'அப்ஜக்டிவ்' முறையில் அமைந்திருக்கும். Aerospace Engineering செயற்கைகோள்கள் , ராக்கெட்கள் , ஏவுகணைகள் பற்றிய படிப்பை வழங்கி வந்த துறை இப்பொழுது இன்னும் பல புதிய பாடகூறுகளை தனக்குள் இணைத்துக்கொண்டு Aerospace Engineering கல்வியாக மாறிஉள்ளது விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர். Electrochemical Engineering வேதி பொருட்கள் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுவது. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுவது, இவற்றில் உள்ள அறிவியல் கூறுகள், வடிவமைப்பு, குணாதிசியங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி படிக்கும் படிப்புதான் Electrochemical Engineering பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள 'சிக்ரி' (சி.இ.சி.ஆர்.ஐ - சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் Pharmaceutical Engineering இதுவரை Chemical Engineering er பணியமர்த்திய Pharmaceutical தொழில்துறை, இப்பொழுது அந்த பணிஇடகளுக்கு அதில் இன்னும் ஆழமாக படிக்க முடிகிற இந்த Pharmaceutical Engineering பயன்படுத்துகிறது மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது. புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன. Petroleum Refining technology Petroleum பிரித்து எடுப்பது , அதை பராமரிப்பது, சுத்திகரிப்பது என இந்த Petroleum துறைஇல் உள்ள தொழில் நுட்பகளை படிக்கும் துறை வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள். Bio Medical Engineering பொறியால் தொழில் நுட்பத்தை மருத்துவ துறைஇல் புகுத்தும் இந்த Bio Informatics, Physiological signal processing , Medical Imaging , 3D Modeling போன்ற பாட பிரிவுகள் அடங்கும் இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே. இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது. தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். Mecharonics Engineering Mechanical, Electrical and Computer Technology கலவைதான் இந்த Mechatronics Engineering , தானியங்கி ரோபோக்கள் போன்ற அதியற்புத தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அடங்கிய இந்த பாட பிரிவுகு இப்பொழுதும், இனி வரும் காலங்களில் பெருமளவில் தேவை உள்ளது என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும். Naval Architecture கடல் வாகனகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை பற்றிய படிப்பு இது, இப்பொழுது வான்வழி போக்குவரத்தும் வளர்ச்சி அடைத்து வருவதால் , இந்த துறை இன்றும் பெரிதும் நாடப்படும் துறையாக உள்ளது. இந்திய கப்பல் படைலும் இந்த படிப்புக்கான தேவை அதிக அளவிலேய உள்ளது ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன Agriculture Information Technology தகவல் தொழில் நுட்பவியல் சில ஆண்டுகளாக பரவலான முக்கியத்துவத்தை பெற்று வருவதை நாம் அறிவோம். இதை விவசாய உற்பதிலும் பயன்படுத்தும் அறிவியல் தான் Agriculture Information Technology இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் 'பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி'. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது. அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

church of the Holy Sepulchre

ஜெருசலம்:இயேசு பிறந்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த புண்ணியஸ்தலம் என்று அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் நம்பும் ஜெருசலத்தில் உள்ள புனித கல்லறை ஆலயத்தை( church of the Holy Sepulchre) பன்னெடுங்காலமாக முஸ்லிம்களை திறந்து கொடுக்கின்றார்கள். ஜுதே,நுஸைபா ஆகிய முஸ்லிம் குடும்பங்களைச் சார்ந்த இருவர் தினமும் ஆலயத்தை திறந்து இரவில் பூட்டுகின்றார்கள்.12-ஆம் நூற்றாண்டில் இருந்தே இப்பொறுப்பை இந்தஇரண்டும் முஸ்லிம் குடும்பத்தினர்தாம் நிர்வகித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 செ.மீ நீளம் கொண்ட சாவியுடன் அதீப் ஜூதே காலையில் ஆலயத்திற்கு வருவார். சாவியை அவர் வஜீஹ் நுஸைபாவிடம் ஒப்படைப்பார். ஏணி மூலம் வஜீஹ் ஆலயத்தின் வாசல் கதவின் பூட்டை திறப்பார்.இம்முறை இரவில் ஆலயத்தை பூட்டும் போதும் தொடருகிறது. கி.பி 325-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் சாவியை பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம்கள் பெற்ற வரலாறு: கி.பி 637-ஆம் ஆண்டு இரண்டாம் கலீஃபா உமர் அவர்கள் ஜெருசலத்தை கைப்பற்றியபொழுது முதலில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை ஜெருசலத்தில் உள்ள ஆலயங்களை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியாகும். அன்று ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆர்ச் பிஷப் ஸெஃப்ராணியஸிற்கு உமர் அவர்கள் கொடுத்த வாக்குறுதி இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மதீனாவில் இருந்துஜெருசலத்திற்கு வந்த நுஸைபா குடும்பத்தினரிடம் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை கலீஃபா உமர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.1187-ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் அய்யூபி ஜெருசலத்தை சிலுவைப் போர் வீரர்களிடமிருந்து கைப்பற்றியபோது ஆர்த்தோடக்ஸ், கத்தோலிக்க சபையினர் இந்த ஆலயம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டபோது இவ்விரு பிரிவினரும் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை நுஸைபா குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சம்மதித்தனர். புனித கல்லறை ஆலயத்தில் திருப்பலி(கிறிஸ்தவ சடங்கு)நடத்துவது அவ்வளவுஎளிதானதல்ல. கத்தோலிக்க, க்ரீக், ஆர்த்தோடக்ஸ், ஆர்மீனியன், காப்டிக் என பல கிறிஸ்தவ பிரிவினரும் இந்த ஆலயத்தின் சிறப்பு உரிமைகளை கை பலத்தின் மூலமே கையகப்படுத்தியுள்ளனர். இவர்களிடையேயான சச்சரவுக்கு தீர்வு கண்டவர் 1853-ஆம் ஆண்டு உஸ்மானிய சுல்தான் ஆவார்.உஸ்மானியர்கள் நுஸைபா குடும்பத்தினருடன் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஜூதே குடும்பத்தினரிடம்சேர்த்து ஒப்படைத்தனர். ஆலயத்தை திறப்பதற்காக 2 சாவிகள் இருந்தன. ஒன்று உடைந்து விட்டதால் தற்போது ஒன்று மட்டுமே உள்ளது. இந்த சாவி 1187-ஆம் ஆண்டு தொட்டே உபயோகிக்கப்பட்டு வருகிறது. கல்லறை ஆலயத்தின் ஒரு சிறிய அறையில் இந்த சாவி பாதுகாக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ சபையினரிடையே நிறுவப்பட்ட சமாதானத்தின் காவலர்களாக இன்று முஸ்லிம்களான நுஸைபா மற்றும் ஜூதே குடும்பத்தினரே திகழ்கின்றனர்.

Monday, 8 April 2013

முருகனை வழிபடும்போது “அரோகரா” போடுவதன் பொருள் என்ன?

“அரோகரா” என்பதைப் பிரித்தால், அர+ஓ+ஹர எனப் பொருள்படும். அரன், கரன் (ஹரன்) இரண்டுமே, சிவனாரின் திருப்பெயர்கள். ஓங்கார ஒலியுடன் சிவநாமத்தை உச்சரிப்பதே “அர ஓ ஹர” என்பதன் பொருள். இந்த “அர ஓ ஹர” என்பதே , ரகர விகுதி, ஓகார நெடிலுடன் சேர்ந்து “அரோஹரா” ஆனது!

இதற்கு இப்படியும் பொருள்கொள்வர். “அர ஹரோ ஹரா” (அரனே எங்கள் துன்பங்களை அழிப்பாயாக!) என்பதே “அரோஹரா” எனச் சுருங்கியது என்பர். ஞானசம்பந்தப்பெருமானாலேயே இவ்வழக்கம் உருவானதாகவும், ஒரு செவிவழிக்கதை வழங்குகிறது.

திருவைந்தெழுத்து, எத்துணை சக்தி வாய்ந்ததோ, எம்பெருமானின் அத்தனை திருநாமங்களும் அதேயளவு சக்திவாய்ந்தவை என்பது மெய்ஞ்ஞானிகள் கூறும் உண்மை. அவ்வகையில், “அரன்” எனும் நாமமும் மிகுந்த சக்தி படைத்ததே! திருமுறை ஓதியபின், நாம் “அரகர மாதேவா” என்பதும், வடநாட்டார், “ஹர் ஹர் மஹாதேவா” என்பதும் இதனாற்றான்!

எனினும், இறைவனை “அர ஓ ஹர” எனப்போற்றும் வழக்கம், தமிழ்மண்ணிலேயே வழக்கமாக இருந்திருக்கிறது. அதனாற்றான் போலும், விசேடமாக தமிழரின் தெய்வமாம், முருகனின் தலங்களிலெல்லாம், இன்று “அர ஓ ஹர” முழக்கம் கேட்கிறது.

ஈழத்தைப் பொறுத்தவரை, முருகன் ஆலயங்களில் மட்டுமன்றி, சிவன் – பிள்ளையார் – அம்மன், ஏன் திருமால் ஆலயங்களிலும் “”அரோகரா” முழக்கம் கேட்கக் காணலாம். இது, சைவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்களில், தம் முழுமுதலாம், அரனையே காண்கின்றனர் என்ற தத்துவத்தையும் உணர்த்தி நிற்கின்றதல்லவா?

“ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே வையகம் சூழ்கவே!”

Friday, 5 April 2013

அம்பிகையின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஸ்தலங்கள்


34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

யார் யாருக்கெல்லாம் , ஜாதக ரீதியாக ராகு தசை, அல்லது ராகு புத்தி நடக்கிறதோ, எவர் ஒருவருக்கு ஜென்ம ராகு இருக்கிறதோ ( தற்போது தனுசு ராசியில் ) அவர்கள், அருகில் இருக்கும் இந்த அம்மனின் சக்தி பீடங்களில் ராகு கால நேரத்தில் , மனம் உருகி பிரார்த்தனையில் ஈடுபட்டால் , அவர்களுக்கு அம்மன் கடாட்சம் கண்டிப்பாக கிட்டும். அவர்களுக்கு ராகுவினால் ஏற்படும் தொல்லைகள் நிச்சயமாக குறையும். 

இந்த ஸ்தலங்கள் அனைத்தும் அம்பிகையின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஸ்தலங்கள் . 

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா

2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு

3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு

4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உத்திர பிரதேசம் 

5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம் 

6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு

7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு

8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு

9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு

10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு

11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.

12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு

13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்

14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்

15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா

16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்

17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா

18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்

19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்

20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா

22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்

23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா

24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு

25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்

26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா

28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்

29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு

30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு

32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்

33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்

34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்

42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்

43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா


44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்

45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்

46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா

47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்

48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்

49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா

50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உத்திர பிரதேசம்

51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்


Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_18.html#ixzz2PckkDQwG


Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_18.html#ixzz2PckJKzzZ

Thursday, 4 April 2013

ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும்-

இகோ கார்': ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும்- துபாய் மாணவர்கள் கண்டுபிடிப்பு ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார் ஒன்றை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.

Monday, 1 April 2013

குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்

குடும்பம் மேன்மை அடைய முக்கிய சுலோகம்.........

ஓம் கணபதி வருக, 
ஓங்கார கணபதி வருக 
ரீங் கணபதி வருக, 
ரீங்கார கணபதி வருக
ஸ்ரீங் கணபதி வருக,
ஸ்ரீங்கார கணபதி வருக
கங் கணபதி வருக,
எங்கள் குடும்பம் மேன்மையுற
வசி வசி வய நம சிவாய நம



1. சிவஞான போதம்

2. சிவஞான சித்தியார்

3. இருபா இருப·து

4. திருவுந்தியார்

5. திருக்களிற்றுப்படியார்

6. உண்மை விளக்கம்

7. சிவப்பிரகாசம்

8. திருவருட்பயன்

9. வினா வெண்பா

10. போற்றிப்ப·றொடை

11. கொடிக்கவி

12. நெஞ்சுவிடுதூது

13. உண்மை நெறி விளக்கம்

14. சங்கற்ப நிராகரணம்

Monday, 25 March 2013

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை

இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

காசுதான் கடவுள். பணத்தை செலவழிக்காமல் உங்களால் ஒரு சின்னப் பொருளைக்கூட வாங்க முடியாது என்கிற இந்தக் காலத்தில் இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை ஒரு நயா பைசாகூட வாங்காமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் மாடுகளை இலவசமாகத் தருகிறது. தமிழ்நாடு முழுக்க பல ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

``அட, ஆச்சரியமா இருக்கே!'' என்று கோவர்தன் அறக்கட்டளையின் தலைவர் நடேசனை சந்திக்கச் சென்றோம். மாட்டுத் தொழுவத்தில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் நடேசன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான இவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். இத்தனை காலம் இவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததன் விளைவு, தமிழகம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலைகளை) அமைக்கப்பட்டு அங்கே மாடுகள் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசுக்களைப் பாதுகாக்க கோவர்தன் அறக்கட்டளை செய்து வரும் பணிகளைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் நடேசன்.

``பசுக்கள் நமக்கு சாதாரண விலங்குகள் அல்ல. நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த அன்னைக்கு இணையாக பசுக்களை மதிப்பவர்கள் நாம். இறைவனுக்கு இணையாக பசுக்களை கும்பிடுபவர்கள் நாம். மனித குலத்துக்கு பசுக்கள் அளிக்கும் பயன் காரணமாகவே அதை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
பசு பால் தருகிறது. அது வெண்ணெய் ஆகிறது. தயிராகிறது என்கிறதோடு பசுவின் பயன் முடிந்துவிடுவதில்லை. அது கொடுக்கும் சாணத்தை வைத்துத்தான் நம்முடைய முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படி நாம் போற்றி வழிபட்டு வந்த பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டாராம். `போயும் போயும் ஒரு மாட்டை வணங்குபவர்கள் நீங்கள். உங்களிடம் நாகரீக வளர்ச்சி இல்லை' என்று குற்றம் சாட்டினாராம். இதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? `நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் நீங்கள் டிராக்டர்களை வணங்குகிறீர்கள். மகத்தான சத்து கொண்ட சாணத்தையும், கோமியத்தையும் (மாட்டின் சிறுநீர்) மாடு நமக்குத் தருகிறது. நீங்கள் கும்பிடும் டிராக்டர் சாணி போடுமா?' என்று கேட்டாராம் ராஜாஜி. அந்த வெள்ளைக்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

இன்றைக்கு நாம் விவசாயத்தில் பின்தங்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம், மாடுகளை நாம் காக்க மறந்ததுதான். மாடு என்கிற மிகப் பெரிய செல்வம் நம்மிடமிருந்து பறி போனதால், பைசா காசு செலவில்லாமல் நமக்குக் கிடைத்த எரு உரம் நமக்குக் கிடைக்காமலே போனது. வயல்களில் எரு உரங்களைப் போடுவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செயற்கையான உரங்களை வாங்கி வயலில் போட்டோம். முதலில் அதிக விளைச்சலைக் கொடுத்த அந்த உரங்கள் இப்போது விளைச்சலின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனி விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்றால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றால், நிலத்துக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இயற்கை விவசாயம்தான் ஒரே தீர்வு.
`இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் மாடுகள் வேண்டும். எங்களிடம் மாடு இல்லை. அதனால்தான் நாங்கள் இயற்கை விவசாயம் செய்வதில்லை' என்று வருத்தப்படுகிற விவசாயிகள் பலர். அப்படிப்பட்ட விவசாயிகளில் நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மாடுகளைத் தந்து வருகிறோம்'' என்கிறார் நடேசன்.

மாட்டுக் கொட்டிலில் மா என்று மாடுகள் கத்த, ``கொஞ்சம் இருங்க! எங்க குழந்தைகளுக்கு இது டீ டைம். நீங்க காப்பி சாப்பிடுங்க. குழந்தைங்களுக்கு தண்ணி காட்டியிட்டு வந்துர்றேன்'' என்று ஓடினார். சில நிமிடங்களுக்குக் பிறகு வந்தவரிடம் ஒரு கேள்வி கேட்டோம்.

``ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாயாவது செலவாகும் என்கிறார்கள். உங்களால் மட்டும் மாடுகளை எப்படி இலவசமாகத் தர முடிகிறது?'' - நடேசனிடம் கேட்டோம்.

``கறவை நின்று போன மாடுகள், வயதான மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகளால் பயன் இல்லை என்று நினைத்து, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட மாடுகளை கிடைத்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் பெரும்பாலும் கேரளாவுக்குத்தான் செல்கிறது. அங்கு அந்த மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகிறது. அரசின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இப்படிக் கடத்திச் செல்லப்படும் மாடுகளை பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் உதவியுடன் பிடித்து, அந்த மாடுகளை மீட்டு வருகிறோம். அந்த மாடுகளை எங்கள் பசு பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்கிறோம்.

பயனற்ற மாடுகளை விற்று, அறுப்புக்கு அனுப்பத் தயாரில்லாத கருணையுள்ளம் கொண்ட சிலர், அந்த மாடுகளைக் கோயில்களுக்குத் தானமாக கொடுத்து விடுகிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகளை ஒரு சில ஆண்டுகள வரை வைத்துப் பராமரிக்கிறது கோயில் நிர்வாகம். பின்பு, ஏலமுறையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுகிறது. இந்த மாடுகளை வெட்டி கறியாக்கி கேரளாவில் விற்க நினைக்கும் சிலர்தான் மீண்டும் மீண்டும் வேறுவேறு ரூபகங்களில் வந்து இந்த மாடுகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
இதனை எதிர்ந்து நாங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு போட்டோ ம். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் மாடுகள் ஏலம் மூலமாக யாருக்கும் விற்கக்கூடாது. அதற்கு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை பராமரிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம். வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவே, கோயில்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றன. இவைகளைத்தான் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகத் தருகிறோம். நாங்கள் தரும் மாடுகள் பால் கொடுக்காது. குட்டி போடாது. வண்டி இழுக்காது. ஆனால் விலை மதிப்பற்ற சாணத்தையும், கோமியத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்!'' - கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் நடேசன்.

`யார் கேட்டாலும் மாடுகளைக் கொடுப்பீர்களா?' - இது நம்முடைய அடுத்த கேள்வி.

``நிச்சயமாகக் கொடுப்போம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். மாடு வேண்டும் என்று எங்களிடம் கேட்டு வருகிறவர்கள் ஒரு ஏக்கரோ அல்லது இரண்டு ஏக்கரோ நிலம் வைத்திருக்க வேண்டும். மாடுகள் கொடுக்கும் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும். செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு நாங்கள் மாடுகளைக் கொடுப்பதில்லை.

இந்த கண்டிஷன்கள் அடிப்படையானவை. இதை விட முக்கியமான இன்னொரு கண்டிஷன் இருக்கிறது. மாடு வேண்டும் என்று கேட்டு வந்தவுடன் யாருக்கு வேண்டுமானாலும் மாடுகளைக் கொடுத்துவிட மாட்டோம். மாடு வேண்டும் என்று கேட்கிறவர் யார், எப்படிப்பட்டவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை அவருக்கு இருக்கிறதா அல்லது மாடுகளை இலவசமாக வாங்கி, கிடைத்த விலைக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்கிற மாதிரி பல கோணங்களில் அவர் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரிப்போம். தீர விசாரித்த பிறகு அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் மாடுகளைக் கொடுப்போம். மாடுகளை நிச்சயம் பாதுகாப்பார் என்கிற நம்பிக்கை அவர் மீது எங்களுக்கு வந்துவிட்டால் ஒரு மாடு அல்ல, இரண்டு மாடு அல்ல, நூறு மாடுகளைக்கூட கொடுப்போம்.

மாடுகளைக் கொடுத்த பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருவோம். நாங்கள் கொடுத்த மாட்டை நீங்கள் நன்றாக வைத்திருக்கிறீர்கள் என்கிற திருப்தி எங்களுக்கு ஏற்பட்டால்தான் மாடு உங்களிடம் தொடர்ந்து இருக்கும். மாட்டுக்கு சரியான தினி கொடுக்காமல் காயப் போட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.
பொதுவாக ஒரு தனிப்பட்ட நபர் வந்து எங்களிடம் மாடு கேட்பதைவிட, மூன்று, நான்கு பேர் சேர்ந்து, கூட்டாக வந்து மாடுகளைக் கேட்டால், அவர்களுக்கு மாடு வழங்க முன்னுரிமை அளிப்போம். இப்படி மாடுகளைக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி வந்து மாடுகளைக் கண்காணிக்கவும் எங்களுக்கு வசதியாக இருக்கும்'' என்கிறார் நடேசன். கோவர்தன் அறக்கட்டளையிலிருந்து மாடுகளைப் பெற்றதன் மூலம் பலருடைய வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு உதாரணம், கூத்தம்பாக்கத்தில் உள்ள அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கொரு மாட்டை கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு. அந்த மாடுகளை வைத்துக் கொண்டு அவர்கள் காய்கறி வளர்த்தார்கள். முன்பு வீட்டில் உள்ள வேலைகளை மட்டுமே செய்து வந்த அந்தப் பெண்கள் இன்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார் நடேசன்.

கோவர்தன் அறக்கட்டளையைப் பொருத்த வரை முக்கியமான இன்னொரு விஷயம், இந்த அமைப்பு கொடுத்த மாடுகளை வைத்துக் கொண்டு, இயற்கையான முறையில் பயிர்களை விளைவித்தால் அதை விற்றுத் தரவும் உதவி செய்கிறது. ``தாம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தினமும் இயற்கையாக விளையும் அரிசி ஒரு மூட்டை வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. நூறு லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. சப்ளைதான் இல்லை'' என்கிறார் நடேசன்.

நடேசனின் முகவரியும் தொலைபேசி எண்ணும்:

கோவர்த்தன் அறக்கட்டளை,
6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073.

044-22272618.

Sunday, 24 March 2013

பில் கேட்ஸுக்கு ஓர் கடிதம்

பில் கேட்ஸுக்கு ஓர் கடிதம்

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் “Start” என்னும் பட்டன் உள்ளது. ஆனால் “Stop” பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. “Run” மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் வீட்டைவிட்டே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை “sit” என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. “Recycle Bin” என்பதை “Rescooter Bin” என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. “Find” பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் “Find” மெனுவிற்குச் சென்று தேடினேன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது.. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் “Hearts” விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8. 8.என்னுடைய குழந்தை “Microsoft word” கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது “Microsoft sentence” ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் “My Computer” ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் “My pictures” என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. “Microsoft Office” இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி “Microsoft Home” கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

நன்றி முக நுல்
‘மிச்செல் ஹெட்ஜஸ்’ (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னா ஹெட்ஜெஸ் (Anna Hedges). 1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்த இடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் மேலே படத்தில் நாவே இருப்பது ……!

அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம் பழமையானது தெரியுமா…? 5000 வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும். அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு.

இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த ‘ஹூவ்லெட் பக்கார்ட்’ (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒரு பதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இது சாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட, நவீன கருவிகள் இல்லாமல் இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்க முடியாது. இந்த கிறிஸ்டல் மண்டையோடும் தலை பெருத்ததாக இருக்கிறது.

படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும்,மாயன் இனத்தவரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

மேலே தலை கவசத்துடன் இருக்கும் படம் எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவிதான் மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அதுதான் மற்றைய தலை பெருத்த சிலை.

இந்த தொழில்நுட்பம் , வித்தியாசமான உருவம் மாயன், எகிப்திய அதிசய, மர்ம பல துறை வளர்ச்சி என்பவற்றை எல்லாம் பார்க்கும் போது வேற்றுகிரக வாசிகள் தொடர்பு இருந்ததாக தெரிகிறது அவர்கள் இங்கு வாழ்ந்ததாகவும் சில அதாரங்கள்....

நம்பவும் முடியவில்லை ..........
நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ....

வரும் ஆனா வராது .....

ராஜ் சிவா என்பவரின் கட்டுரையில் இருந்து தொகுத்தது.

Saturday, 23 March 2013

கனவுகளும் அதன் பலன்களும்

கனவுகளும் அதன் பலன்களும்  

      நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
      அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
      இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

  • v  ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
  • v  வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • v  கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • v  விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
  • v  திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
  • v  ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • v  இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
  • v  சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • v  நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • v  தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • v  இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
  • v  திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • v  தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  • v  உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
  • v  கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
  • v  ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
  • v  மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
  • v  கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
  • v  மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • v  வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி  பெரும்.
  • v  மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

தீய பலன் தரும் கனவுகள்

  • v  பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
  • v  தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
  • v  எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
  • v  எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
  • v  இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
  • v  பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
  • v  புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
  • v  குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
  • v  நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
  • v  ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
  • v  நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
  • v  முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
  • v  முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
  • v  சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
  • v  பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
  • v  காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

Read more at http://tk.makkalsanthai.com/2013/02/blog-post_8266.html#VBSgy4FtKhCeAI2q.99 

Friday, 22 March 2013

நவ சக்திகள்



எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதா கச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது . எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள்யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளிமற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள ்.

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரதகண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில்நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள்

1வாமை, 2ஜேஷ்டை, 3ரவுத்ரி, 4காளி, 5கலவிகரணி, 6பலவிகரணி, 7பலப்பிரமதனி, 8சர்வபூததமனி, 9மனோன்மணி

நவ தீர்த்தங்கள்

1கங்கை, 2யமுனை, 3சரஸ்வதி, 4கோதாவரி, 5சரயு, 6நர்மதை, 7காவிரி, 8பாலாறு, 9குமரி

நவ வீரர்கள்

1வீரவாகுதேவர்,
2வீரகேசரி, 3வீரமகேந்திரன், 4வீரமகேசன், 5வீரபுரந்திரன், 6வீரராக்ஷசன், 7வீரமார்த்தாண்டன ், 8வீரராந்தகன், 9வீரதீரன்

நவ அபிஷேகங்கள்

1மஞ்சள், 2பஞ்சாமிர்தம், 3பால்,
4நெய்,
5தேன்,
6தயிர், 7சர்க்கரை, 8சந்தனம், 9விபூதி.

நவ ரசம்

1இன்பம், 2நகை, 3கருணை, 4கோபம், 5வீரம்,
6பயம், 7அருவருப்பு, 8அற்புதம், 9சாந்தம் ஆகியன

நவக்கிரகங்கள்
1சூரியன், 2சந்திரன், 3செவ்வாய், 4புதன்,
5குரு, 6சுக்கிரன், 7சனி,
8ராகு,
9கேது

நவமணிகள்

1கோமேதகம், 2நீலம், 3வைரம், 4பவளம், 5புட்பராகம், 6மரகதம், 7மாணிக்கம், 8முத்து, 9வைடூரியம்

நவ திரவியங்கள்

1பிருதிவி, 2அப்பு,
3தேயு,
4வாயு, 5ஆகாயம், 6காலம்,
7திக்கு, 8ஆன்மா, 9மனம்

நவலோகம் (தாது)

1பொன், 2வெள்ளி, 3செம்பு, 4பித்தளை, 5ஈயம், 6வெண்கலம், 7இரும்பு,
8தரா, 9துத்தநாகம்

நவ தானியங்கள்

1நெல், 2கோதுமை, 3பாசிப்பயறு, 4துவரை, 5மொச்சை, 6எள், 7கொள்ளு, 8உளுந்து, 9வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது

1சோமவார விரதம், 2திருவாதிரை விரதம், 3உமாகேச்வர விரதம், 4சிவராத்ரி விரதம், 5பிரதோஷ விரதம், 6கேதார விரதம்,
7ரிஷப விரதம், 8கல்யாணசுந்தர விரதம்,
9சூல விரதம்

நவசந்தி தாளங்கள்

1அரிதாளம், 2அருமதாளம், 3சமதாளம், 4சயதாளம், 5சித்திரதாளம், 6துருவதாளம், 7நிவர்த்திதாளம், 8படிமதாளம், 9விடதாளம்

அடியார்களின் பண்புகள்

1எதிர்கொள்ளல்,
2பணிதல், 3ஆசனம் (இருக்கை) தருதல்,
4கால் கழுவுதல்,5அருச்சித்தல், 6தூபம் இடல், 7தீபம் சாட்டல், 8புகழ்தல், 9அமுது அளித்தல்

நவரத்னங்கள்

1தன்வந்த்ரி, 2க்ஷணபகர், 3அமரஸிம்ஹர், 4சங்கு, 5வேதாலபட்டர்,
6கடகர்ப்பரர், 7காளிதாசர், 8வராகமிஹிரர், 9வரருசி (விக்ரமார்க்கனி ன் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படு வர்)

அடியார்களின் நவகுணங்கள்

1அன்பு, 2இனிமை, 3உண்மை, 4நன்மை, 5மென்மை, 6சிந்தனை, 7காலம்,
8சபை, 9மவுனம்.

நவ நிதிகள்

1சங்கம், 2பதுமம், 3மகாபதுமம், 4மகரம், 5கச்சபம், 6முகுந்தம், 7குந்தம்,
8நீலம்,
9வரம்

நவ குண்டங்கள்
(யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பதுவகையிலான யாக குண்ட அமைப்புக்கள்)

1சதுரம், 2யோனி, 3அர்த்த 4சந்திரன், 5திரிகோணம், 6விருத்தம் (வட்டம்), 7அறுகோணம், 8பத்மம், 9எண்கோணம், (பிரதான விருத்தம்.)

நவவித பக்தி

1சிரவணம், 2கீர்த்தனம், 3ஸ்மரணம், 4பாத சேவனம், 5அர்ச்சனம்,6வந்தனம், 7தாஸ்யம், 8சக்கியம், 9ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள்

1குமார பிரம்மன், 2அர்க்க பிரம்மன்,
3வீர பிரம்மன், 4பால பிரம்மன், 5சுவர்க்க பிரம்மன், 6கருட பிரம்மன், 7விஸ்வ பிரம்மன், 8பத்ம பிரம்மன், 9தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள்

1சூரியனார் கோயிவில், 2திங்களூர், 3வைத்தீஸ்வரன் கோவில், 4திருவெண்காடு,
5ஆலங்குடி, 6கஞ்சனூர், 7திருநள்ளாறு, 8திருநாகேஸ்வரம், 9கீழ்ப்பெரும்பள் ளம்

நவபாஷாணம்

1வீரம்,
2பூரம்,
3ரசம், 4ஜாதிலிங்கம், 5கண்டகம், 6கவுரி பாஷாணம், 7வெள்ளைபாஷாணம், 8ம்ருதர்சிங், 9சிலாஷத்

நவதுர்க்கா

1ஸித்திதத்ரி, 2கஷ்முந்தா, 3பிரம்மாச்சாரினி , 4ஷைலபுத்ரி, 5மகா கவுரி, 6சந்திரகாந்தா, 7ஸ்கந்தமாதா, 8மகிஷாசுரமர்த்தி னி, 9காளராத்ரி

நவ சக்கரங்கள்
1த்ரைலோக்ய மோகன சக்கரம், 2சர்வசாபுரக சக்கரம்,
3சர்வ சம்மோகனசக்கரம்,
4சர்வ சவுபாக்ய சக்கரம், 5சர்வார்த்த சாதக சக்கரம், 6சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், 9சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள்

1ஆதிநாதர், 2உதய நாதர், 3சத்ய நாதர், 4சந்தோஷ நாதர், 5ஆச்சாள் அசாம்பயநாதர்,
6கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7சித்த சொவ்றங்கி நாதர், 8மச்சேந்திர நாதர்,
9குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள்

¤இரண்டு கண்கள்,

¤இரண்டு காதுகள்,

¤இரண்டு மூக்குத் துவாரங்கள்,

¤ஒரு வாய்,

¤இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள்

1தோல், 2ரத்தம், 3மாமிசம், 4மேதஸ், 5எலும்பு, 6மஜ்ஜை, 7சுக்கிலம், 8தேஜஸ், 9ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன.
காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர ். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக் குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.

9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும்,நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

Wednesday, 20 March 2013

Anaivarukkum Nanmai Sei:

Anaivarukkum Nanmai Sei:

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!! அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

சுயம்பு சித்தன்:



 
    
சுயம்பு சித்தன்: பாடல் ௨ உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனும் நீ அலையோ எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே இது மிக அருமையான பாடல். பலவிதத்திலும் அர்த்தம் கொள்ளக்கூடியது. முதலில் கடைசி இரண்டு வரிகளின் அர்த்தம் பார்ப்போம். (மேலே சொன்னவாறெல்லாம் இருக்கும்) தேவர்களின் தலைவனே நீ எனக்கு புறப்பற்று எல்லாம் அறுந்து, அகப்பற்றும், நான் எனும் அகங்காரமும் இழந்து நலம்பெற வழிசொல். இப்போது முதல் இரண்டு வரிகளின் எனக்கு புரிந்த மூன்று அர்த்தங்களைப் பார்ப்போம். ௧. பெருமகிழ்ச்சியுடன் துன்பமற்று யோகநிலையில் இனிமையாக பேசி விளையாடுபவன் நீ தானே உல்லாச - பெருமகிழ்ச்சியுடன் இருப்பது நிராகுல - துன்பமற்று இருப்பது யோக - யோகநிலையில் இருப்பது இத - இதமாக இருப்பது (வித - பல விதமாக இருப்பது) சல்லாப - காதல் பேசுதல் (இனிமையாக பேசுதல்) விநோதன் - விளையாடுபவன் ௨. உல்லாச, நிராகுல, யோக என பலவிதங்களில் சல்லாப விநோதனாக (இனிமையாக பேசி விளையாடுபவனாக) இருப்பவன் நீ தானே. அதாவது உல்லாச சல்லாப விநோதனாகநிராகுல சல்லாப விநோதனாக, யோக சல்லாப விநோதனாக என பலவிதமாக இருப்பவன் நீ தானே. ௩. என்னுடலில் உள்ள ஆறு ஆதாரங்களாக இருப்பவன் நீ தானே. இந்த ஆறு வார்த்தைகளும் ஆறுபடை வீடுகளையும், நம்முடலில் இருக்கு ஆறு ஆதாரங்களை குறிப்பிடுகின்றன உல்லாச - என்றைக்கும் ஒரே தன்மையாக இருப்பது; திருப்பரங்குன்றம்; மூலாதாரம் . நிராகுல - துன்பமற்று ஞானமயமாக இருப்பது; திருச்செந்தூர்; சுவாதிஷ்டானம். யோக - யோகநிலையாகிய இன்பத்தைத் தருவது; திருஆவினன்குடி; மணிபூரகம். இத - இதமாக இருப்பது; சுவாமிமலை; அநாகதம். சல்லாபம் - குன்றுதோறாடல்; விசுத்தி. விநோதம் - வியப்பு, மகிழ்ச்சி; பழமுதிர்சோலை; ஆக்ஞை.

Friday, 8 March 2013

இராவணன் இயற்றிய நூல்கள்

இராவணன் இயற்றிய நூல்கள்

இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம்

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்கள் – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்


* * * * * * * * * * * * * * * * * * * * *
"இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே"
-திருநீற்றுப்பதிகம்-

இராவணன் மேலது நீறு – இரவின் வண்ணம் கொண்ட இராவணன் பக்தியுடன் தன் அங்கமெங்கும் அணிவது திருநீறு

எண்ணத் தகுவது நீறு - தியானிக்க ஏற்றது திருநீறு

பராவணம் ஆவது நீறு – பாராயணம் செய்யப்படுவது திருநீறு

பாவம் அறுப்பது நீறு – பாவங்கள் என்னும் தளைகளை அறுப்பது திருநீறு

தராவணம் ஆவது நீறு – தரா என்னும் சங்கின் வண்ணம் ஆவது திருநீறு

தத்துவம் ஆவது நீறு – எல்லாவற்றிற்கும் அடிப்படையானத் தத்துவமாய் இருப்பது திருநீறு.

அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே – அரவுகள் (பாம்புகள்) வணங்கும் (நிறைந்திருக்கும்) திருமேனியை உடைய திருவாலவாயான் திருநீறே

புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை..!

புலனாய்வுக் குறள் - திருக்குறள் காட்டும் புலனாய்வுத் துறை..!

ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன. பெரும் பொருளை அதற்காக அள்ளி இறைக்கின்றன. இராணுவம் பொருளாதாரம் விஞ்ஞானம் போன்ற அனைத்திலும் உலக அரசுகள் ஒன்றையொன்று வேவு பார்த்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. புலனாய்வுத் துறையின் தகவல்களை வைத்துத் தமது வெளியுறவுக் கொள்கைகளை செப்பனிட்டுக் கொள்கின்றன.

இத்தகைய புலனாய்வுத் துறையின் கட்டமைப்பு செயற்பாடு பராமரிப்புப் பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் அழகாக அல்ல ஆழமாகச் சொல்லியிருக்கிறார். உளவுத் துறையினரை ஒற்றர்கள் என்றும் அவர்களைக் கட்டியாளும் கடினமான வேலையை ஒற்றாடல் என்றும் குறிப்பிட்டார் வள்ளுவர். அவர் சொன்ன கருத்துக்களே இன்றைக்கும் எதுவித மாற்றமின்றி உலகத்தால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன சொன்னவரைத் தெரியாமல்!

அரசாங்கம் ஒன்றுக்கு உலகத்தைப் பார்க்கும் கண்ணாக இருப்பது உளவுத்துறை என்றார் முதல் குறளிலேயே திருவள்ளுவர். அவர் கூற்றை மெய்ப்பிப்பது போல அண்மையில் தன்னால் தேடப்பட்ட ஒருவரை பாகிஸ்தானில் உளவுத் துறை என்ற கண்ணாலே பார்த்து நடவடிக்கை எடுத்தது அமெரிக்கா.

எல்லோருக்கும் நாள் தோறும் நிகழ்வனவற்றை எல்லாம் ஒரு அரசு உளவுத்துறை மூலமாக விரைந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். இதைச் செய்யத் தெரியாத அரசாங்கம் வெற்றிபெற வேறு வழி கிடையாது என்று மூன்றாவது குறளிலே சொன்னவரும் அவரே!.

புலனாய்வுத் துறை மூலம் யாரைக் கண்காணிக்க வேண்டும் என்றால் கொடுத்த வேலையைச் செய்பவர்கள் தன் சுற்றத்தவர்கள் அல்லது சுற்றியிருப்பவர்கள் எதிரிகள் என்று யாரையும் தப்பவிடாமல் எல்லோரையும் கண்காணிக்க வேண்டும் என்றது திருக்குறள்.

"வினைசெய்வார் தன்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று."

இனி உளவு வேலைக்கு மதத் தலைவர்கள் போன்ற கோலம் தான் மிகவும் பொருத்தமானது என்பது வள்ளுவர் முடிபு. அவர்களால் தான் கடினமான இடங்களில் கூட இலகுவாக புக முடியும். இன்றைய உலகில் பல அரசுகளுக்கு மதபீடங்களும் மத குருக்களும் தான் உளவாளிகளாக இருக்கின்றமை வள்ளுவரின் அரசியல் தெளிவிற்கு சிறந்த சான்றாகும்.

"துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என்செயினும் சோர்வு இலது ஒற்று."

உளவாளி பிடிபட்டால் என்ன சித்திரவதை செய்தாலும் தான் யாரென்பதைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. ஒன்றும் வாய்திறந்து சொல்லக்கூடாது என்கிறார் வள்ளுவர்.

அது மட்டுமல்ல தான் கண்காணிக்க வேண்டியவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வேண்டியவர்களை எப்படியாவது வளைத்துப் பிடித்து அறிந்து அதிலும் சந்தேகம் இல்லாமல் உண்மை பொய்களை கண்டறியக் கூடியவனே திறமையான உளவாளி என்பார் வள்ளுவர்.

ஏனெனில் கிடைக்கும் செய்தியில் உளவாளிக்கு குழப்பம் ஏற்பட்டால் அரசினால் தெளிவான நடபடிக்கையை விரைந்து எடுக்க முடியாமல் போய்விடும் என்பது என்பது வள்ளுவர் எண்ணம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவர் இரண்டு விடயங்களை உலகம் வியக்கும் வண்ணம் சொன்னார். முதலாவது அரசுகள் எந்த ஒரு உளவாளியையம் முழுமையாக நம்பிவிடக்கூடாது. அதுவும் ஆபத்திலே தான் சிலவேளை முடியும் என்பார் அவர்.

ஒரு உளவாளி தரும் செய்தியைக் கேட்டுக் கொண்டு அதை இன்னொரு உளவாளியையும் அனுப்பி ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்ன ஒரு நூல் திருக்குறள். ஒரு வேளை உளவாளிகள் விலை போய்விடுவார்கள் என்று கூட வள்ளுவர் நினைத்திருக்கலாம். இன்றைய உலகில் அது நடந்தும் இருக்கிறது.

"ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்."

அடுத்ததாக வள்ளுவர் சொன்ன முக்கியமான கருத்து ஒரு உளவாளிக்கு இன்னொரு உளவாளியைத் தெரிய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதாகும். ஒற்று ஒற்று உணராமை ஆள்க என்றார் அவர்.

உளவாளிக்கு சம்பளம் கொடுப்பது அடுத்தவருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அரசாங்கம் என்ன காரணத்துக்காக அப்படிப் பணம் கொடுக்கிறது? பணம் பெறும் அளவுக்கு என்ன தொடர்பு? என்ற கேள்விகள் எழுந்து உண்மைகள் எல்லாம் வெளிவந்து விடும். பின்பு அந்த உளவாளியைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்பார் வள்ளுவர்.

"சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை"

புலனாய்வுப் பணி செய்வாரை புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொன்ன ஒரே ஒரு தமிழ் இலக்கியம் திருக்குறளாகத்தான் இருக்க முடியும்! எத்தனையோ அரசியல் சித்தாந்தங்களைப் படித்த நாம் வள்ளுவரின் ஒற்றாடலைப் படித்திருந்தால் பெருமளவு துன்பங்களைத் தவிர்த்திருக்கக் கூடும். என்ன செய்வது?

உயிரின் தாகம் நிற்கட்டுமே உங்கள் செந்நீரால்

உயிரின் தாகம் நிற்கட்டுமே 
உங்கள் செந்நீரால் 
ஒரு சொட்டு மழைத்துளி உலகைக் காக்கும் என்றால் உங்கள் ஒரு சொட்டு இரத்தம்
ஒரு குடும்பத்தையே காக்கும் !

உங்கள் இரத்தத்தால்
ஒரு சிரம் காக்காப்பட்டாலும்
ஆயிரம் கரங்கள் சேர்ந்து
உன் சிரத்தை காக்கும்...!

எமனின் பாசக் கயிற்றை
குருதியால் அறுக்கலாம் ...!
உங்கள் குருதியால் உலகையே காக்கலாம்
மனதில் உறுதியோடு இருங்கள் !

மனிதனை தின்னும்
மண்ணுக்கு இரத்தத்தை அர்பணிக்கும் மனிதனே !
ஒரு உயிரைக் காக்க அறப்பணி செய்யுங்கள்...

வசீகரமான வளையல் பாட்டி


வசீகரமான வளையல் பாட்டி

‘நான் சீதாப்பாட்டி வந்திருக்கேன்... வளையல் போடுறீயளா புள்ளையளா...’’ - இந்தக் குரலுக்கு தஞ்சாவூரை ஒட்டியுள்ள பள்ளி அக்ரஹாரம், திருவையாறு, அரசூர் வட்டாரங்களில் உள்ள எல்லா வீடுகளின் கதவுகளும் திறக்கின்றன. ஒரு கையில் வாளி, இன்னொரு கையில் பை, இடுப்பில் அட்டைப்பெட்டி... இவை அனைத்தையும் சுமந்து கொண்டு வீட்டுக்கு வீடு நின்று குரல் கொடுத்து நகர்கிற சீதாப்பாட்டிக்கு வயது 103 என்றால் நம்பமுடியாது. வார்த்தையில் மட்டுமின்றி பார்வை, நடை அத்தனையிலும் அப்படியொரு தெளிவு!

சீதாப்பாட்டிக்கு சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள மானம்புச்சாவடி. கணவர் ராமசாமி 40 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மகன்கள். 1 மகள். 25க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள். அவர்களில் சிலருக்கு திருமணமாகி பேரன், பேத்தி பார்த்து விட்டார்கள். அவர்கள் யாரையும் அண்டியிருக்கவில்லை சீதாப்பாட்டி. எந்த வீட்டுக்குச் சென்றாலும் அவரிடம் வளையல் வாங்குகிறார்களோ இல்லையோ, தங்கள் வீட்டுப் பெரிய மனுஷியாகப் பாவித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்று சாப்பாடோ, டீயோ கொடுக்கிறார்கள். அடுத்த நொடியில் அந்த வீட்டில் கலந்து, உறவாடத் தொடங்கி விடுகிறார் சீதாப்பாட்டி.

‘‘வீட்டுக்காரருக்கு நெசவுத்தொழில். வீட்டிலேயே தறிபோட்டு நெய்வோம். பட்டு நெசவுதான். அந்தக் காலத்துல அவர் நெஞ்சு தர்ற சேலைகளை எடுத்துக்கிட்டு வல்லம், ராஜகிரி, பாபநாசம், கோவிந்தகுடி, திருவையாறுன்னு சுத்தி விப்பேன். அப்போத்தொட்டு இந்த ஜனங்கள்லாம் எனக்கு உறவு. போகப்போக நெசவுத்தொழில் சரியாயில்லை. அவருக்கும் உடம்பு சரியில்லாமப் போச்சு. சிண்டு, சிறுசுகளை வச்சுக்கிட்டு சிரமமாப் போச்சு.
இந்த வளையல் பெட்டியையும், ரப்பர் சாமான்களையும் கையில எடுத்தப்போ எனக்கு 22 வயசு. மொத்தக்கடைல சரக்கை எடுத்துக்கிட்டு வந்து ஊரு ஊராப் போயி விப்பேன்.

ஏற்கனவே தெரிஞ்சவங்ககிறதால எல்லாரும் எங்கிட்ட விரும்பி வளையல் போட்டுக்குவாங்க. இங்கே இளைஞ்சு திரியிற குமரிக எல்லாம் ஆத்தா வயித்துல இருக்கிறப்போ வளைகாப்பு போட்டுவிட்டவ நான்தான்!’’ - பற்கள் சிதைந்த இடைவெளி தெரிய பலமாகச் சிரிக்கிறார் சீதாப்பாட்டி.

திருவையாறு சுற்று வட்டாரத்தில் யார் வீட்டில் வளைக்காப்பு நடந்தாலும் தேடிப் பிடித்து சீதாப்பாட்டியை அழைத்து வந்து விடுகிறார்கள். அவர் வந்து முதலில் வளையல் போட்டவுடன்தான் மற்ற உறவுக்காரர்கள் வளையல் மாட்டி விடுவார்களாம். அந்த அளவுக்கு ராசி கை அவருடையது.

‘‘சீதாப்பாட்டி வந்துட்டா தெருவே கொண்டாட்டமாயிடும்.

எல்லாப் பெண்களும் கூடிருவாங்க. வளையல் போட்டுக்கிறதை விட அது பேசுற கிண்டலைக் கேக்குறதுக்குன்னே வருவாங்க. வளையல் மட்டுமில்லாம, சின்னச்சின்ன பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துக்கிட்டு வரும். சாப்பாடு கொடுத்தா வாங்கிச் சாப்பிடும். ஆனா, பணம் கொடுத்தா வாங்காது. வளையலுக்கு எவ்வளவோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்தை அப்படியே திருப்பிக் கொடுத்திடும். ‘வச்சுக்க பாட்டி’ன்னு சொன்னா, உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுடின்னு உபகதை பேசும். கல்யாணம் தள்ளிப்போற பெண்களுக்கு பாட்டி கையால வளையல் போட்டா உடனே கல்யாணம் கூடிவரும்னு எல்லாரும் நம்புறாங்க.

அதேமாதிரி வளைகாப்பு வைபவத்துல பாட்டி வளையல் போட்டா சுகப்பிரசவம் ஆகும்...’’ என்கிறார் திருவையாறு ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த புஷ்பராணி.

‘‘மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இருந்தும் ஏன் தனியாக சிரமப்படுகிறீர்கள்?’’- பாட்டியிடம் கேட்டால் இறுக்கமாகப் பேசுகிறார். ‘‘அதது புள்ளை குட்டின்னு ஆயிருச்சு. அவங்கவங்க உழைப்பு, அவங்கவங்க குடும்பத்தைப் பாக்கத்தான் சரியா இருக்கு. பாவம்... இந்த வயசுல அதுகளுக்குச் சுமையா ஏன் நான் போய் உக்காரணும்? அவங்களுக்கு உதவி செய்ய முடியாட்டியும் உபத்திரவம் செய்யாம இருக்கணும். இனிமே எனக்கென்ன இருக்கு? எந்த வீட்டுக்குப் போனாலும், ‘வா பாட்டி’ன்னு உரிமையாக் கூப்பிட்டு, நாலு சோறு போட்டு, தண்ணி கொடுக்க இந்த ஜனங்கள்லாம் இருக்காங்க. 



புள்ளைகளை பாக்கணும்னு ஆசை வந்தா, புள்ளைகளுக்கு ஏதாவது தீனி வாங்கிட்டு நேரா கிளம்பிப் போயிருவேன். காலையில போனா ராத்திரிக்கு கிளம்பிருவேன்...’’ என்கிறார் சீதாப்பாட்டி. தஞ்சாவூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார் சீதாப்பாட்டி. அதிகப்பட்சம் 200 ரூபாய். அதை விற்றால் ஐம்பதோ, நூறோ கிடைக்கும். யாரிடமும் கணக்குப் போட்டு கறாராகப் பேச மாட்டார். கொடுப்பதை வாங்கிக்கொள்வார்.

‘‘பாட்டி போற வழியில மனம் பிறழ்ந்தவங்க, முடியாதவங்க நின்னா இருக்கறதை குடுத்துட்டுப் போயிரும். சின்னப்புள்ளைகளுக்கு வளையல் போட்டா காசு வாங்காது. கொடுத்தாலும், ‘புள்ளைகளுக்கு பிஸ்கட்டு வாங்கிக் குடு ஆத்தா’ன்னு சொல்லிடும்...’’ என்று பாட்டி புராணம் பாடுகிறார் ரம்யா.

திருவையாறு பகுதியில் வசிக்கும் ரஹீமா பீவியின் மகள்களுக்கு பாட்டி வளையல் போட்ட பிறகுதான் திருமணம் கூடி வந்ததாம். அதற்குப் பிரதிபலனாக தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் பாட்டியை தங்கிக்கொள்ள சொல்லிவிட்டார். தனிக்காட்டு ராணியாக சுதந்திரமாக வாழ்கிறார் சீதாப்பாட்டி. ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது.

‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே... வேணாம் தம்பி...’’ என்கிறார் சீதாப்பாட்டி.

சவுக்கால் அடித்தது போல் இருக்கிறது சீதாப்பாட்டியின் வார்த்தைகள். இன்னும் பல ஆண்டுகள் அவர் பாடமாக வாழ வேண்டும்!